• Jul 24 2025

வெளியாகிறது 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் டிரைலர்... சூப்பரான அப்டேட் கொடுத்த படக்குழு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஏராளமான நடிகர் கூட்டத்தைக் கொண்ட முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. இவ்வாறு சினிமாவில் ஒரு காமெடியனாக அறிமுகமான இவர் தற்போது ஹீரோவாகவும் அசத்தி வருகின்றார். 


அத்தோடு இவர் தற்போது 'மாமன்னன், சந்திரமுகி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது சுராஜ் இயக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். 


லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பிரமாண்டமாக இசையமைத்துள்ளார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு யாவும் முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 


அதுமட்டுமல்லாது சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement