• Jul 26 2025

விஜய் பட நடிகைக்கு ஏற்பட்ட சோதனை...அதுவும் இப்படியா நடக்கனும்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

2000ம் ஆண்டு தெலுங்கில் வெளியான யுவகுடு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூமிகா. தமிழில் பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக என்ட்ரி ஆனார். ஜானு என்ற கேரக்டரில் விஜய்யின் பெஸ்டியாக நடித்து ரசிகர்களை வசீகரித்த பூமிகா, தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்தார்.

தமிழில் ரோஜாக்கூட்டம், சில்லுன்னு ஒரு காதல், களவாடிய பொழுதுகள் போன்ற படங்கள் பூமிகாவின் கேரியர் பெஸ்ட் எனலாம். எனினும்  தெலுங்கில் குஷி, ஒக்கடு, மிடில் கிளாஸ் அபய் ஆகிய படங்களும் பூமிகாவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன. முக்கியமாக கிரிக்கெட் வீரர் தோனியின் பயோ பிக் படமாக வெளியான MS தோனி: அன்டோல்ட் ஸ்டோரி-இல் தோனியின் அக்காவாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி என பல மொழிகளில் நடித்துள்ளார் பூமிகா. ஆனாலும் அவரது கேரக்டர் அனைத்துமே மிக மெல்லியதாகவே இருக்கும். சாந்தமான முகம், இயல்பான நடிப்பு என்று அசத்தியிருப்பார். கிளாமர் கேரக்டர்களில் நடிப்பதை பூமிகா முற்றிலும் தவிர்த்து வந்தார். அதேபோல், ஆக்‌ஷன், ஹாரர் த்ரில்லர் போன்ற படங்களிலும் அதிகம் நடித்ததில்லை.


இவ்வாறுஇருக்கையில்  சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமீபத்தில் ஒரு பேட்டிக் கொடுத்திருந்தார். அதில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். அதன்படி, படப்பிடிப்பில் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை எனக் கூறியுள்ள பூமிகா காமெடி கேரக்டர்களில் நடிக்க பல வருடங்கள் முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

லை என்றுள்ள பூமிகா, அதிரடியான கதை கொண்ட படங்களில் கூட தன்னால் நடிக்க முடியும் என தெரிவித்துள்ளார். அத்தோடு, திகில் படங்களில் நடிக்கவும் விருப்பம் உள்ளது. எனினும் இயக்குநர்கள் எனக்கு மென்மையான கேரக்டர்களை மட்டுமே கொடுக்கின்றனர். இது எனக்கு வருத்தமளிப்பதாக நடிகை பூமிகா தெரிவித்துள்ளார்.

பூமிகாவின் இந்த பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.எனினும் சமீபத்தில் ரிலீஸான உதயநிதியின் கண்ணை நம்பாதே படத்தில் இரு வேடங்களில் நடித்திருந்தார் பூமிகா. இன்ஸாடாவில் ஆக்டிவாக இருக்கும் பூமிகா, அடிக்கடி தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனது கேரியர் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement