• Jul 25 2025

அடுத்தடுத்து தெரிய வரும் உண்மை..கலங்கி நிற்கும் சுந்தரி..நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. திருமண வாழ்க்கை சரியாக அமையா விட்டாலும் தன்னுடைய படிப்பிற்காக தன்னம்பிக்கையுடன் போராடும் பெண்ணைப் பற்றியே இந்த சீரியல் எடுத்துக்காட்டுகின்றது. இதில் கதாநாயகியாக கேப்ரியல்லா நடித்து வருகின்றார்.

இதில் சுந்தரியை விட்டுட்டு அனு என்ற ஒரு பெண்ணை கார்த்திக் திருமணம் செய்திருக்கும் விடயம் கர்த்திக்கின் அம்மா மற்றும் அப்பாவுக்கு தெரிந்து விட்டது. அத்தோடு இதனைத் தாங்க முடியாத கார்த்திக்கின் அப்பா மாரடைப்பால் இறந்தும் விட்டார்.

இதனால் கார்த்திக்கின் அப்பாவின் இறுதிச் சடங்கு முழுவதையும் சுந்தரியே நிறைவேற்றி வைத்தாள்.இவ்வாறுஇருக்கையில் சுந்தரியின் அம்மாவிற்கும் இந்த உண்மை தெரிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.



அதாவது  அதில் சுந்தரியின் அம்மாவின் உடல் நிலை எப்படி உள்ளது என தெரிந்து கொள்ள டாக்டரிடம் போய்க் கேட்கின்றார்.அவரோ எனிமேல் உங்க அம்மா பேச முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார். 

இதனால் கலங்கி நிற்கிறார்.இவ்வாறு இருக்கையில் கார்த்திக்கின் நண்பன் சுந்தரியின் அம்மாவிடம் சுந்தரிக்கு குழந்தை பிறக்காது எனும் உண்மையை கூறிவிடுகின்றார்.இதனால் அவரின் அம்மா அதிர்ச்சியடை இந்த ப்ரமோ நிறைவடைகின்றது. 


 


Advertisement

Advertisement