• Jul 23 2025

என்னைத் தாலாட்ட வருவாளா... விஜய் டிவியில் பாட்டுப் பாடி அசத்திய விஜய்... வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். 'தளபதி' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற இவர் தனது தந்தையின் இயக்கத்தில் உருவான 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார்.


அதனைத் தொடர்ந்து சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்து தன்னுடைய சாதனையை நிலை நாட்டியுள்ள இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இவரோடு இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் யாவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாக இருக்கின்றது.


அதுமட்டுமல்லாது 'வாரிசு' படம் முடிந்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' இல் விஜய் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்புக்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. 

இவ்வாறாக நடிப்பில் பட்டையை கிளப்பி வருகின்ற விஜய் நிஜத்தில் அமைதியான சுபாவம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் சாதாரண ஒரு மனிதனைப் போல நடந்து கொள்கின்ற இவரின் குணவியல்பு பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 


விஜய்யின் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் போன்றவை அடிக்கடி சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழமை. அந்த வகையில் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் 'என்னை தாலாட்ட வருவாளா' பாடலை நடிகர் விஜய் பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement