• Jul 25 2025

அஞ்சலி செலுத்த வந்த ரசிகருடன் இளவரசர் ஹரியின் மனைவி நடந்து கொண்ட விதம் - தீயாய் பரவும் செய்தி .

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ராணி எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் தங்கள் மனைவிகளான, கேட் மிடில்டன் மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் துக்கப்படுபவர்களை ஆறுதல் படுத்துவதற்காக வின்ட்சர் கோட்டைக்கு வெளியே மக்களை சந்தித்தனர்.


அதுமட்டுமல்லாது அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மலர் வளையங்கள், பதாகைகள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன் அங்கு நின்ற மக்களையும், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள் மற்றும் அவரது மனைவிகள் கவுரவித்தனர். 


இந்த நிகழ்வில் கூடியிருந்த அவர்களின் ரசிகர் ஒருவர் தனது துக்கத்தை துக்கத்தை வெளிப்படுத்தியதுடன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்லிடம் நான் தங்களை கட்டி பிடிக்க முடியுமா என்று கேட்டார் அதற்கு மேகன் அவரை கட்டியணைத்து ஆறுதல் படுத்தினார். இதுகுறித்து அந்த ரசிகர் பின்வருமாறு கருத்து வெளியிட்டார் 

"அவளை கட்டிப்பிடிக்க முடியுமா என்று நான் கேட்டேன், அவள் என்னை மீண்டும் கட்டிப்பிடித்தாள். இது மிகவும் அற்புதமான தருணம். நான் இப்போதும் நடுங்குகிறேன்."

மேலும் அவர் ,வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசி மற்றும் சசெக்ஸ் ராணி எலிசபெத் மறைந்ததைத் தொடர்ந்து துக்கத்தின் போது ஒன்றாக வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரசிகர் மேலும் குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement