• Sep 11 2025

நிவினால் ஜெயா எடுத்த தவறான முடிவு... கதறி அழும் மகன்... விரட்டி அடிக்கும் தந்தை... கண்கலங்க வைத்த 'Mahanadhi' Serial..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. தந்தையை இழந்து வாழும் நான்கு பெண் பிள்ளைகள் தமது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் காவேரி குடும்பத்துடன் வெளியேறி சென்னைக்குப் போகவுள்ள விடயம் நிவினுக்குத் தெரிய வருகின்றது.


உடனே வீட்டிற்குச் சென்ற நிவின் கோபத்தில் "இப்போ உங்களுக்கு சந்தோசமா, அவ மனசு வெறுத்து இந்த ஊரை விட்டு சென்னைக்குப் போறா, தயவு செய்து இரண்டு பேரும் செத்துப் போங்க" என தனது தாய், தந்தையிடம் கத்தி விட்டுச் செல்கின்றார்.


இதனையடுத்து நிவினின் தாய் தூக்க மாத்திரை விழுங்கி உயிரை மாய்க்க முயல்கின்றார். இதனைத் தொடர்ந்து நிவினின் தந்தை ஜெயாவை ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டு செல்லப் போகின்றார். நிவினும் அழுதுகொண்டு காரிற்கு அருகில் போகின்றார். ஆனால் அவனின் தந்தையோ போடா எனக்கூறி நிவினை விரட்டி அடிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement