• Jul 26 2025

அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போன்று நடிக்கும் இளம் பெண்… வெளியான வீடியோ…நம்பவே முடியலப்பா என்னமா நடிக்கிறாங்க …!

Prema / 3 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் உலக அழகியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக அவர்களின் மனதைக் கொள்ளையடித்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென உருவாக்கி வைத்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த 'இருவர்', 'ஜீன்ஸ்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'ராவணன்', 'எந்திரன்', 'குரு' உள்ளிட்ட பல படங்கள் இன்றும் நம் மனதை விட்டு அகலாமல் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. இப்படங்களில் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் 'ராவணன்'. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'உசிரே போகுது….' பாடலில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பலராலும் போற்றப்பட்டது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயை போன்றே இளம் பெண் ஒருவர் இப்பாடலுக்கு அதே உடையிலும், அதே பாவனையிலும் நடித்திருக்கின்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு பெண்ணுக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement