• Jul 24 2025

அனிருத்க்கே டஃப் கொடுக்க வரும் இளம் இசையமைப்பாளர்...வெளிநாட்டிலிருந்து இறங்கிய பிரபலத்தின் மகன்... யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது டாப் நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி கொண்டு இருக்கும் அனிருத்தின் வளர்ச்சி திரையுலகையே வியந்து பார்க்க வைக்கிறது. இவருக்கு போட்டியாக வளர வேண்டும் என்ற ஒரே கண்ணோட்டத்துடன் படிப்பை முடித்துவிட்டு இளம் பிரபலம் ஒருவர் வந்து இருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா ஜோடிக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகனும் பிறந்தார். இவர் சில விருது வழங்கும் விழாக்களில் பெற்றோருடன் வந்திருக்கிறார். அப்போதெல்லாம் சிறு பையனாக இருந்த ராகுல், இப்போது 19 வயது வாலிபனாக மாறி உள்ளார்.

தற்போது ராகுல் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பி உள்ளார். கையில் டூர் பேக், லக்கேஜ் என வாரிசு பட விஜய் போல வந்து நிற்கும் ராகுலை ராதிகாவும் சரத்குமாரும் வாரி அணைத்துக் கொண்டனர். வெகு நாட்களுக்குப் பிறகு ராகுல் தன்னுடைய பெற்றோர்களை சந்தித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இந்த புகைப்படத்தில் ராகுல் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். ஏற்கனவே இசையில் அதிக ஆர்வம் கொண்ட ராப் பாடகரான ராகுல், சன்டேக் ஆப் மூலம் இசையுலகில் அறிமுகமானவர். இந்த ஆல்பத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த பாடல் வெளியான புதிதில் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் இருந்து வந்த ராதிகா சரத்குமாரின் வாரிசான ராகுலின் இசை பயணம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement