• Jul 24 2025

தீ தளபதி பாடல்..சம்பளமே வாங்காத சிம்பு..இது தான் காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. கதாநாயகனாக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குநர் என பலமுகம் கொண்டவராக வலம் வருகின்றார் சிம்பு.எனினும் தற்போது மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் இப்படம் சில மாதங்களில் வெளியாகவுள்ளது. இவ்வாறுஇருக்கையில்  சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடலை சிம்பு பாடினார். தமனின் இசையில் சிம்பு பாடிய இப்பாடல் வெளியாகி செம ஹிட்டடித்துள்ளது.

பாடியது மட்டுமல்லாமல் லிரிக்கல் வீடியோவில் சிம்பு நடனமும் ஆடியுள்ளார்.எனினும்  இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் சிம்புவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்பாடலை பாடுவதற்காக சிம்பு சம்பளமே வாங்கவில்லையாம்.

தளபதிக்காகவும், தமனுக்காகவும் சம்பளமே வாங்காமல் சிம்பு இப்பாடலை பாடியுள்ளார். மேலும் இதைகேள்விப்பட்ட ரசிகர்கள் சிலர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படம் வெளியாக விஜய் உதவினார்.

அதன் காரணமாகத்தான் சிம்பு விஜய்க்காக இப்படத்தில் சம்பளமே வாங்காமல் பாடல் பாடியுள்ளார் என பேசி வருகின்றனர். எனினும் தற்போது இப்பாடல் யூடியூபில் பல சாதனைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement