• Jul 25 2025

இவங்களோட intro பலமா இருக்கே- காதல் ஜோடிகளாக பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த நிஷா மற்றும் சிங்கப்பூர் தீபன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும்.இந்த சீரியலில் வெற்றிக்கு சுடர் தன்னுடைய பிள்ளை என்ற உண்மை தெரிந்ததற்குப் பிறகு அபி மீது மீண்டும் காதல் வயப்பட்டு இருக்கின்றார். மீண்டும் அபியுடன் சேர வேண்டும் என்று இருக்கின்றார்.

ஆனால் வெற்றிக்கு உண்மை தெரியும் என்று தெரிந்து விட்டால் அபி சுடரையும் கொண்டு எங்காவது போய் விடுவார் என்ற பயத்தில் யாரும் உண்மையை சொல்லாமல் இருக்கின்றனர். மேலும் கண்மனி எப்படியாவது வெற்றியை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அபி பற்றி தவறாக சொல்லி வருகினன்றார்.

இது ஒரு புறம் இருக்க அபியும் வெற்றியும் தங்களுடைய மாமாவின் ஆசைக்காக கிராமத்திலுள்ள கோயிலில் சடங்குகளை நிறைவேற்றுவதற்காகச் சென்றுள்ளனர்.அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடிகை நிஷா மற்றும் சிங்கப்பூர் தீபன் இருவரும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது இருவரும் காதல் பிசாசு காதல் பிசாசு பாடலுக்கு டான்ஸ் ஆடிய படியே வந்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement