• Jul 24 2025

சண்டை போட்டுத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை... நான் செய்வது சரி என்று நம்புகிறேன்... குடும்பத்திற்கு தகவல் கூறிய யுகேந்திரன்..

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரொம்பவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபற்றியுள்ள யுகேந்திரன் தனது குடும்பத்தினருக்கு  செய்தி ஒன்றை கூறியுள்ளார்.


அந்த செய்தியில் அவர் கூறிய விடயமானது " தனது குடும்பத்தினருக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு, 20 நாட்கள் ஆகிவிட்டது தெரியவில்லை நான் இங்கு விளையாடுவது வெளியில் எப்படி இருக்கிறது என்று என்னை பொறுத்தவரையில் நான் ஞாயமாகத்தான் செய்கிறேன் ஆனால் மக்கள் எப்படி பார்க்கிறார்கள்,நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.


தேவையான இடத்தில் தான் வாய்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் வெளியில் எவ்வாறு இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்று நினைத்து நான் செய்வது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று தெரியவில்லை.


சண்டை போட்டுத்தான் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஆனால் எல்லோருக்கும் சமனாக இருக்க வேண்டும் என்பதால் அப்படி செய்கிறேன். அதுதான் சரி என்று நம்புகிறேன் என்றும் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்றும் யுகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement