• Jul 25 2025

திரும்பவும் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை- தில்லாகவும் ரொம்ப கூலாகவும் பதில் கூறிய சமந்தா

stella / 3 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் இயக்குநர் கரன் ஜோகர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் . காஃபி வித் கரன் 7. இந்த நிகழ்ச்சியில் அண்மையில் நடிகை சமந்தா பாலிவூட் நடிகரான அக்சய் குமாருடன் கலந்துகொண்டார். அத்தோடு இந்த நிகழ்வில் அக்சய் குமாருடன் "ஊ சொல்றீயா மாமா" பாடலுக்கு மீண்டும் குத்தாட்டம் போட்டிருந்தார்.

அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் திருமணம் குறித்து கரன் சில கேள்விகளை சமந்தாவிடம் முன்வைத்தார். அதற்கு பதிலளித்துள்ள சமந்தா, "மேரேஜ் வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழலின் போது பிரிவதைத் தவிர வேறு வழியில்லை.

அது கடினமான முடிவாக இருந்தாலும், அதுவே தங்களுக்கு சரியான தீர்வாக அமைந்தது" எனத் தெரிவித்துள்ளார்.மீண்டும் காதல் வருமா என்ற கேள்விக்கு, "திரும்பவும் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை, தான் இப்போது மிகவும் உறுதியாக உள்ளேன்.

இந்த வாழ்க்கை முறை தனக்கு வசதியாக உள்ளது. இனிமேல் தான் இன்னும் வெளிப்படையாகவே இருப்பேன்" என தில்லாகவும் ரொம்பவே கூலாகவும் பதிலளித்துள்ளார். சமந்தாவின் இந்த கருத்துகள், பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement