• Jul 23 2025

நிஜத்திலும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், வயசானால் விட்டுக் கொடுத்திடுங்க- பளிச்சென்று பேசிய மன்சூர் அலிகான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் மன்சூர் அலிகான்.இப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன. இதனால் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

 பின்னர் படவாய்ப்புக் குவிய ஆரம்பித்ததால் அரசியலிலும் குதித்தார்.நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். மேலும் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்திருந்தார்.


அந்த வகையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக திலீப்குமார் இருந்தார். பிறகு ராஜேஷ் கண்ணா வந்தார். தமிழில் தியாகராஜ பாகவதர் இருந்தார். பின் எம்ஜிஆர் வந்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்த் வந்தார். 


ஒருவரின் மூன்று படங்கள் வரிசையாக ஓடி வசூலித்துவிட்டால் அவர்தான் உச்ச நட்சத்திரம் என்று கருதப்படுகிறது. வயதானால் பட்டத்தை விட்டுக்கொடுத்துவிட வேண்டும். ரஜினிகாந்த் ஒரிஜினலாகவும் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும். படத்தில் மட்டும் இருந்தால் எப்படி. நிஜத்திலும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டும்தான்" என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement