• Jul 24 2025

வேற வழியில்லாம தான் அந்த ஹீரோவோட அட்ஜெஸ்ட் பண்ணேன் : உண்மை உடைக்கும் கமலின் மகள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றார்.

தமிழ்  திரையுலகில்  அஜித், தனுஷ், விஜய் ,சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார், தற்போது பிரபல பாடகர் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வரும் நிலையில் அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.



தனது சோசியல் மீடியாவில்  தனது காதலுடனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார் ,கடந்த மாதம் வீர சிம்கா ரெட்டி படத்தில் தன்னை விட வயது மூத்த நடிகருடன் ஜோடியாக நடித்தார்.

 இந்த நிலையில் தனது திரை வாழ்க்கை குறித்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் அதில் வால்டர் வீரைய்யா படத்தின் பாடல் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்



படத்தின் ஒரு முக்கிய பாடலின் போது சிரஞ்சீவியுடன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து பாடல் காட்சியில் நடித்திருப்பார் , இதனை குறிப்பிட்டு பேசிய ஸ்ருதிஹாசன் எப்படிப்பட்ட குளிராக இருந்தாலும் திரைப்படத்தில் பெண்கள் மட்டும் சின்ன உடை அணிய வேண்டும் பொதுவாக எனக்கு பணியில் ஆடவே பிடிக்காது ஆனாலும் வேறு வழியில்லாமல் அட்ஜெஸ்ட் பண்னேன் என ஓப்பனாக கூறியுள்ளார்.



Advertisement

Advertisement