• Jul 26 2025

பிக்பாஸ் சீசன் 6 இல் 5 பைனலிஸ்ட் இவர்கள் தான்-இப்பவே தெரிய வந்த உண்மை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.இதில் 21போட்டியாளர்களின் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்களே உள்ளார்கள்.

 தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கள் கடினமாக கொடுக்கப்படுகிறது. இவ்வாறுஇருக்கையில் கடைசி வாரம் வரையில் யார் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் விஜய் டிவியைச் சேர்ந்த ராஜு, பிரியங்கா ஆகியோரை பைனல் லிஸ்ட்டாக தேர்ந்தெடுத்தனர். ஏனென்றால் இவர்கள் இருவருமே விஜய் டிவியை சேர்ந்தவர்கள் தான். அத்தோடு இதில் முதலிடத்தை ராஜுவும், இரண்டாவது இடத்தை பிரியங்காவும் பெற்றிருந்தார்கள்.

இப்பவும் அதே தில்லாலங்கடி வேலையை தான் விஜய் டிவி செய்யவுள்ளது. அதாவது விக்ரமன், தனலட்சுமி, சிவின், அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் பைனல் லிஸ்ட்டாக செல்ல உள்ளனர். எனினும் இதை ஏற்கனவே விஜய் டிவி தீர்மானம் செய்து வைத்துள்ளது.

மேலும் இதில் தனலட்சுமி எல்லாருடனும் சண்டையிட்டு வருவதால் அவரால் டிஆர்பி எகிறுகின்றது. இதைத் தொடர்ந்து சிவினுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. மற்ற மூவருமே விஜய் டிவியைச் சார்ந்தவர்கள் தான். விக்ரமன் விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் நடித்துள்ளார்.

அத்தோடு அமுதவாணன் மற்றும் மைனா இருவருமே விஜய் டிவியை சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆகையால் இவர்கள் ஐந்து பேரும் பிக் பாஸ் வீட்டின் இறுதி நாட்கள் வரை செல்ல உள்ளனர்.  இதில் டைட்டில் வின்னராக விஜய் டிவியை சேர்ந்த ஒருவராகத்தான் இருப்பார் என்று கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement