• Jul 25 2025

வாய்ப்புக்காக என்னிடமும் அதை கேட்டாங்க...நடிகை விஜயலக்ஷ்மி கொடுத்த அதிர்ச்சி புகார்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிகையாக களமிறங்கியவர் விஜயலக்ஷ்மி. 

மேலும் அவர் இயக்குநர் பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விஜயலக்ஷ்மி சென்னை 28, அஞ்சாதே, வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின்னர் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கிய அவர் பிக் பாஸ், சர்வைவர் போன்ற ஷோக்களில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.


எனினும் தற்போது சினிஉலகத்திற்கு விஜயலக்ஷ்மி அளித்திருக்கும் பேட்டியில் தான் சினிமாவில் அதிகம் ஜெயிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை பற்றி பேசி இருக்கிறார். நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது பற்றி தான் கோபமாக பேசி இருக்கிறார். தானும் அதை சந்தித்து இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

 "ஒரு நல்ல படம் இருக்கிறது என்றால் அதற்கு 10 பேர் முயற்சி செய்வார்கள். போட்டி அதிகமாக இருப்பதால் சிலர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுக்கிறார்கள். டைரக்டர் அதை பண்ணுவியா என கேட்பதில்லை. ஆனால் வருபவர்களே அதையும் செய்வேன் என வருகிறார்கள்."


"எல்லா இடத்திலும் அது இருக்கிறது என சொல்லவில்லை. ஆனால் பல இடங்களில் நடக்கிறது. ஒரு பெண் அப்படி செய்யும்போது, அவர்கள் எல்லா பெண்களிடமும் அதையே எதிர்பார்கிறார்கள். என்னிடமும் அதை கேட்டிருக்கிறார்கள், ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை" என விஜயலக்ஷ்மி தெரிவித்து இருக்கிறார்.


Advertisement

Advertisement