• Jul 26 2025

நாங்க ஏதோ தப்பு பண்ணின மாதிரியே கேட்பாரு- ஆனால் இப்போ பழகிட்டாரு- விக்ரமனை வெச்சு Fun பண்ணிய சாந்தி!!..

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் அமுதவாணன் வெற்றி பெற்று முதலாவது இறுதிப் போட்டியாளராக தேர்வாகியுள்ளார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. பெரும்பாலும் ஏடிகே தான் வெளியேறுவார் என்றும் கணித்து விட்டனர்.

மேலும், இந்த வீட்டில் இருந்து எலிமினேட் ஆன  போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோளாறு, ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, தனலட்சுமி மற்றும் மணிகண்டா ஆகியோரும் தற்போது சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர்.


பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருவது பார்வையாளர்களையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது. அப்படி ஒரு சூழலில், தற்போது உள்ளே வந்துள்ள சாந்தி, சமையல் வேலைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. அப்போது அங்கே விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.

அந்த சமயத்தில் விக்ரமன் குறித்து பேசும் சாந்தி, "இவரு ஆரம்பத்துல அது ஏன் (சமையலில்) போடுறீங்கன்னு கேப்பாரு. இவரு கேக்குறது பாத்தா கத்துக்குற மாதிரி இருக்காது. நம்மள வந்து தெரிஞ்சு ஏதோ தப்பு தப்பா போடுறோம்ன்னு கேள்வி கேக்குற மாதிரி இருக்கும். கடைசியில பாத்தா சமையலே தெரியாது. ஆனா இப்ப சமையல் எல்லாம் கத்துக்கிட்டாரு.எல்லாமே சூப்பரா பண்ணி இருக்காங்க" என கூறினார்.

இதன் பின்னர் பேசும் மைனா, "வேற வழி இல்ல. பண்ணி தான் ஆகணும்" என தெரிவித்தார். சமையல் குறித்து விக்ரமன், சாந்தி உள்ளிட்டோர் மத்தியில் ஜாலியாக நடந்த உரையாடல் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement