• Jul 25 2025

'என் மனைவியிடம் அந்த மாதிரி நடந்து கொண்டார்கள்’ - பேஸ்புக் வீடியோவில் பிரபல நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மைனக் பானர்ஜி, 2012 ஆம் ஆண்டு 'பாஸ்போர்ட்' என்ற பெங்காலி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார். தொடர்ந்து பூம், பிக்னிக், பரூட், நாயகர் மாடோ, தி கர்வ், ஹாரர் ஸ்டோரீஸ், பேபி ஓ பேபி, ஷிமண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதேபோல் மீரா, ரூப்கதா, தகுமார் ஜூலி, துலோகோனா, இச்சே புடுல் ஆகிய டிவி சீரியல்களிலும் நடித்தார். இதில் இச்சே புட்டுல்” இல் சௌரியநீல் கதாபாத்திரத்தில் மூலம் மைனக் பானர்ஜி ரசிகர்களிடத்தில் பிரபலமானார். 

மேலும் Mismatch, Feludar Goyendagiri  ஆகிய வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இப்படியான நிலையில்  தானும், மனைவி ஐஸ்வர்யா ஆகியோரை கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டதாக நடிகர் மைனக் பானர்ஜி  கூறியுள்ளார்.  இச்சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக விமான நிலையத்தில் இருந்து பேஸ்புக் லைவ் செய்து என்ன நடந்தது என்பதை மைனக் பானர்ஜி விவரித்துள்ளார். அதில் சென்னையில் இருந்து வந்த தனது மனைவியை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்குச் சென்றேன். கேட் 1B முன் இருந்த நிலையில், என்னுடைய மனைவி  கொஞ்சம் பொருட்களை வைத்திருந்தார். 

அவை எல்லாவற்றையும் காரில் ஏற்றிக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் பிடித்தது. அந்நேரம் பணியில் இருந்த காவலர்கள் தன்னைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், தனது மனைவியிடம் அநாகரிகமாக கொண்டதாகவும் மைனக் பானர்ஜி குற்றம் சாட்டினார்.

இதேபோல் இன்னொரு வீடியோவில், ஒரு போலீஸ்காரர் தனது காரை நிறுத்தி, தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு மிரட்டியதாகக் கூறினார். 

மேலும் என் மனைவியிடம் அவதூறாக பேசி அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். அதனால் நான் எனது காரில் இருந்து கீழே இறங்க வேண்டியிருந்தது. அப்போதுதான் வாக்குவாதம் முற்றியது.

சக்கர நாற்காலியை விமான நிலையத்துக்குள் ஏற்றிச் செல்ல முடியாததால் எனது காரை அகற்றுமாறு போலீசார் என்னிடம் கூறினர். ஆனால், அந்த இடத்தில் சக்கர நாற்காலி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் மைனக் பானர்ஜிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement