• Jul 24 2025

என்னை ஆம்பிளை மாதிரி என்று சொன்னாரு, அதுக்கு பிறகு மாத்திக்கிட்டேன்-பயப்பிடாமல் ஓபனாகப் பேசிய தமன்னா

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்தவர்களில் நடிகை தமன்னாவும் ஒருவர். பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படம் மூலம் இவர் அறிமுகமானார்.

அதன்பின் சில படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சையமானார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கி அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.


ஒருகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி விஜய், அஜித், விக்ரம், விஷால், சூர்யா, தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.தற்பொழுது ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.அதுவும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகளில் தமன்னா காட்டிய நடிப்பை பார்த்து ரசிகர்கள் ஏங்கிப்போய்விட்டனர்.


இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை சூடாக்கியது. இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நான் சினிமாவில் நுழையும் போது ஒரு தயாரிப்பாளர் என்னிடம் நீ ஒரு ஆணைப் போல நடக்கின்றாய், நீ சண்டை போட்டாலும் கோபப்பட்டாலும் நடந்தாலும் நடனமாடினாலும் நீ என்ன செய்தாலும் அதில் பெண்மை வெளிப்பட வேண்டும் என்றார். அந்த தருணத்திலிருந்து தான் நான் பெண்ணாக நடந்து கொள்ள கற்றுக் கொண்டேன் என தன்னுடைய கடந்த கால அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement