• Jul 26 2025

காசுக்காக இப்படி பண்ணிட்டாங்க.. இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முக்கிய இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கிய படங்கள் தமிழ் நாட்டிலும் மட்டுமின்றி இந்திய முழுவதும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இவர் எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து திரைப்படமாக உருவாக்கினார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி. ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.அத்தோடு இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 22 -ம் தேதி வெளியாகுமென பட குழுவினர் அறிவித்துள்ளனர். 


இவ்வாறுஇருக்கையில் வழக்கறிஞர் சார்லெஸ் அலெக்சாண்டர் என்பவர் பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

அதில், " சுயலாபத்திற்காக வரலாற்று கதையை தவறாக பயன்படுத்தியுள்ளார் மணிரத்னம். அத்தோடு வரலாற்று படங்களை எடுக்கும் போது சரியான ஆராய்ச்சி செய்ய வேண்டும்.


போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் படம் உள்ளது" என்று குற்றம் சாட்டி உள்ளார்.

Advertisement

Advertisement