• Jul 24 2025

"அவங்க குடுக்கல, அதனால நான் எடுத்தேன்".. திமிராக பதிலளித்த ஐஸ்வர்யாவின் பணிப்பெண் ஈஸ்வரி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சனிபத்தில் தன் வீட்டு லாக்கரில் இருந்த தங்க மற்றும் வைர நடிகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை காணாமல் போய்விட்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். அதில் வீட்டில் வேலை பார்த்து வந்த பணி பெண் ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். 


இதனைத் தொடர்ந்து ஈஸ்வரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளாக கார் ஓட்டுநர் வெங்கட்டுடன் சேர்ந்து சிறுக சிறுக லாக்கரில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. மேலும் திருடிய நகைகளை சென்னை மயிலாப்பூரில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததும், அந்தப் பணத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியதும் விசாரணையின் மூலமாக அம்பலமானது.

இந்நிலையில் ஈஸ்வரி அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யா அம்மா தனக்கு 30 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கொடுத்தார்கள் எனவும், அதை வைத்து தான் எப்படி குடும்பம் நடத்த முடியும் என கேட்டுள்ளார் ஈஸ்வரி. 


இதனால் தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் இப்படி சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வந்ததாகவும், அதை அவர்கள் கவனிக்காததால் பெரிய திருட்டில் தைரியமாக இறங்கியதாவும் கூறியுள்ளார் ஈஸ்வரி. அத்தோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லாக்கர் சாவி தன்னிடம் இருந்ததால் வீட்டில் யாரும் இல்லாதபோது நகைகளை திருடி விற்றதாகவும் கூறியுள்ளார் ஈஸ்வரி. 

அதுமட்டுமல்லாது "இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இன்னும் திருடி இருப்பேன்" என்றும் தெனாவட்டாக கூறினாராம் ஈஸ்வரி. இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement