• Jul 23 2025

'வேற லெவல் ஒரு கிளைமேக்ஸ் சீனை தூக்கிட்டாங்க'.. அது மட்டும் இருந்திருந்தா.. ஜெயிலர் எடிட்டர் ஓபன் டாக்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி - நெல்சன் காம்போவில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் வருவதுடன் 3 நாட்களில் 210 கோடிக்கும் அதிகளவான வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.அடுத்த ஒரே மாதத்தில் 700 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக சொல்லபப்டுகிறது.


இந்நிலையில் ஹாலிவுட் படங்களை போல ஸ்லோவாக ஆரம்பிக்கும் ஜெயிலர் திரைப்படம் இடைவேளை காட்சிக்கு முன்பாக சூடு பிடித்து ஜெட் வேகத்தில் சென்று இரண்டாம் பாதியில் சுனில், தமன்னா போர்ஷனில் மீண்டும் ஸ்லோவாகி ப்ரீ கிளைமேக்ஸ் மற்றும் கிளைமேக்ஸில் உச்சம் தொட்டது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டாரின் நண்பர்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்து மாஸ் காட்டினர்.

அதிலும் அந்த கிளைமேக்ஸ் காட்சியில் பல வருடங்கள் கழித்து மீண்டும் புகைப்பிடிக்கும் காட்சியில் ரஜினிகாந்த் நடிக்க அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார் என அனைவரும் புகைப்பிடிக்கும் மாஸான கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை தியேட்டரில் மிரட்டியது.

அதை விட தெறி மாஸான ஒரு கிளைமேக்ஸ் காட்சி அதற்கு பிறகு வரும் என்றும் ஆனால், சென்சார் நிறுவனம் அதை கட் செஞ்சிட்டாங்க என ஜெயிலர் படத்தின் எடிட்டர் நிர்மல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூற அந்த டெலிடட் சீனையாவது போடுங்க பார்த்து ஃபயர் விடுறோம் என கெஞ்சி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள் .


Advertisement

Advertisement