• Jul 25 2025

மொபைல் மூலம் பணம் திருடி விட்டார்கள்- பிரபல நிறுவனம் மீது புகார் கொடுத்த மீசையை முறுக்கு திரைப்பட நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஆத்மிகா. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்திருந்தார். இதனை அடுத்து கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவருக்கு மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.தற்போது ஆத்மிகா  பிரபல மொபைல் நிறுவனம் மீது ஒரு அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார். Autopay ஆப் செய்த பிறகும் தனது கணக்கில் இருந்து 4999 ருபாய்யை எடுத்துவிட்டார்கள் என அவர் புகார் கூறி இருக்கிறார்.

அதன் பிறகு இந்த பிரச்சனை பற்றி புகார் தெரிவித்து அந்த பணத்தை திரும்ப பெற வழி கிடைத்து இருப்பதாகவும் அவர் மற்றொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement