• Jul 26 2025

''ஏதோ ஒரு வேலை நடக்கனும்னு தான் அவங்க அங்க போனாங்க''..வைரமுத்து மீது புகார் கூறுவது ஏன்? விளாசி தள்ளிய பிரபல நடிகை..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அவரின் இந்த புகாரை அடுத்து தமிழ்நாட்டில் மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. 

தமிழ்நாட்டில் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீடூ புகார் தெரிவித்த பின்னர் அவருக்கு சினிமாவில் பாட வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை, அதுமட்டுமின்றி டப்பிங் யூனியனிலும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடுப்பான சின்மயி, சமீபத்தில் இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி அதன் மூலம் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். 

அதோடு வைரமுத்து மீது 17 பெண்கள் பாலியல் புகார் அளித்தும் அவர் மீது ஆக்‌ஷன் எடுக்காதது ஏன் எனவும் சின்மயி கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் இந்த கேள்விக்கு முதல்வர் தரப்பில் இருந்து எந்தவித ரிப்ளையும் வரவில்லை.

இந்த நிலையில், பழம்பெரும் நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலா, மீடு விவகாரம் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ள அவர் கூறியுள்ளதாவது : “மீடூ மாதிரி பிரச்சனைகள் அந்த காலகட்டத்தில் கிடையவே கிடையாது. மீடூ ஒரு கன்றாவியான விஷயம். மீடூ-னு இன்னைக்கு சொல்றவங்க அன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஏதோ ஒரு விதத்துல ஏதோ ஒரு வேலை நடக்கனும்னு தான் அவங்க அங்க போனாங்க.

அந்த மனுஷன் பேரன் - பேத்தி எடுத்து ஒரு நல்ல அந்தஸ்துல இருக்குறாரு, இப்போ வந்துட்டு எனக்கு மனவு அறுக்குது, துடைக்குதுனு இப்போ எதுக்கு வாயை திறக்குறாங்க. அப்போ என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இவங்க ஏன் போனாங்க. இந்த மீடூ-ங்கிறத நான் ஏத்துக்கவே மாட்டேன். இவங்களுக்கு ஏதோ வேலை நடக்கனும் அப்படிங்கிறதுக்காக என்னமோ பண்ணிட்டு, இப்போ வந்துட்டு மீடூ, மீடூனு ஏன் ஆரம்பிக்கிறாங்க. அப்போ எதுக்கு பேசாம இருந்தாங்க. இவ்ளோ நாள் எதுக்கு வாயை மூடிட்டு இருந்தாங்க. அவரு ஒரு நல்ல அந்தஸ்துல வந்ததுக்கு அப்புறம் அவரைப் பற்றி சொல்லி அவர் மேல கலங்கம் ஏற்படுத்துவதற்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்களா என கேள்வி எழுப்பி உள்ளார் வெண்ணிற ஆடை நிர்மலா.


Advertisement

Advertisement