• Jul 25 2025

எங்க நிலைமையை யோசிச்சுப் பாருங்க கதிர்... ஓப்பனாக கேட்ட பெண் ரசிகை... வெளியானது மாஸ் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவிலான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமானது.

நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல இந்நிகழ்ச்சியானது விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சீசன்களைப்போல இந்த சீசனும் கமலே தொகுத்து வழங்குகின்றார். அதிலும் குறிப்பாக கமலின் எபிசோட்டுக்காக காத்துக் கிடக்கும் ரசிகர்களோ ஏராளம். 


அந்தவகையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் போட்டியாளர்களிடம் தங்களுடைய கேள்விகளைக் கேட்கின்றனர். அந்தவகையில் ஒரு பெண் ரசிகை எழுந்து "நீங்க எதற்கு வீட்டுக்குள்ள வந்திருக்கீங்க, வெறும் அனுபவத்திற்காக மட்டுமா, எங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க" எனக் கூறுகின்றார்.

இன்னொரு ரசிகை "அசீம் மற்றும் தனலட்சுமி நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னால் இந்த வீடே வேஸ்ட் என்று எங்களுக்கு தோணும்" எனக் கூறுகின்றார். இவ்வாறாக பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் வகையில் இன்றைய ப்ரோமோ அமைந்திருக்கின்றது. 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!  


Advertisement

Advertisement