• Jul 25 2025

"எல்லா படத்துக்கும் விமர்சனம் யோசிச்சு எழுதுங்க" '- 'கொன்றால் பாவம்' வெற்றி விழாவில் வரலக்ஷ்மி

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயின், வில்லி என தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் எல்லா கதாபாத்திரங்களும் கலக்கி வருகிறார்.

 தற்போது சந்தோஷுக்கு ஜோடியாக நடித்துள்ள ” கொன்றால் ல் பாவம்” கடந்த மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை செய்து வருகிறது.

அந்தவகையில் கொன்றால் பாவம்' படத்தின் வெற்றி விழாவில் வரலக்ஷ்மி இப்படம் குறித்து பேசுகையில்;

''ரிவியூ என்ன எழுத போறாங்களோ தெரியலன்னு ரொம்ப டென்ஷன் ஆ பீல் பண்ணன் . ஆனா உண்மையில நல்ல கண்டன்ட் வைச்சு நல்லதா எழுதியிருக்கிறீங்க.எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. 90 சதவீதமானோர் கிளாமாக்ஸ் என்னன்னு சொல்லாம  எழுதியிருக்கீங்க அதுக்கு ரொம்ப நன்றி.ஏனெனில் கிளாமாக்ஸ்சொல்லிட்டா படம் பாக்கிறதில அர்த்தம் இருக்காது. நீங்க எழுதும் போது எல்லா படத்துக்கும் யோசிச்சு எழுதினா மத்த படங்களும் நல்லா வளரும்.நம்ம இண்டஸ்ரியும் நல்லா வளரும்''.. ,என கூறினார்.

Advertisement

Advertisement