• Jul 25 2025

வெளியானது 'திருவின் குரல்' படத்தின் டிரைலர்.. ரத்தம் தெறி தெறிக்க வந்த வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 24-வது படம் ‘திருவின் குரல்’ (Voice of Thiru). இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிப்பதோடு ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 


அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து எழுதி உள்ளார்.

இந்நிலையில் திருவின் குரல் படத்தின் டிரைலர் ஆனது தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை பார்க்கும்போது இப்படத்தில் நடிகர் அருள்நிதி வாய்ப்பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞராக நடித்துள்ளது தெரிகிறது.


அந்தவகையில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலர் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement