• Jul 24 2025

ரஜினியால் தனுஷின் குடும்பத்திற்கு நேர்ந்த அவமானம்.. பழி தீர்ப்பதற்காகத் தான் இந்தப் பிரமாண்ட வீடா.?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் மிகப்பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி சமீபத்தில் குடியேறியுள்ளார். கிட்டத்தட்ட 150 கோடி மதிப்பில் அமைந்த அந்த வீட்டை கடந்த இரண்டு வருடங்களாக பார்த்து பார்த்து கட்டியுள்ளார் தனுஷ். அந்த வீட்டில் தற்போது தன் தாய் தந்தையுடன் இணைந்து வசித்து வருகின்றார்.


மேலும் மிகப்பிரமாண்டமான அந்த வீட்டில் பல ஹைடெக்கான வசதிகள் எல்லாம் இருக்கின்றதாம். அதாவது வீட்டினுள்ளேயே ஜிம் , விளையாட்டு அரங்கம், ஹோமோ தியேட்டர் என அனைத்து வசதிகளும் இருக்கின்றதாம். அதுமட்டுமல்லாது ஒவ்வொரு அறையிலும் பல லட்சங்களில் இன்டீரியர் வேலைகள் கூட செய்யப்பட்டு உள்ளதாம். 

அத்தோடு வெளிநாட்டிலிருந்து பல பொருட்களை வரவழைத்து வீட்டை மேலும் பலவாறு அலங்காரப்படுத்தி இருக்கின்றார் தனுஷ். இதுபோல ஒரு ஹைடெக்கான வீட்டை கட்டுவது தனுஷின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் தனுஷ் மிகப்பிரமாண்டமான வீட்டை அதுவும் போயஸ் கார்டனில் கட்டியுள்ளதற்கு குறிப்பிட்ட காரணம் இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. மேலும் தன் முன்னாள் மாமனார் ரஜினியின் வீட்டிற்கு அருகிலேயே தனுஷ் இந்த வீட்டை கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதற்கு முழு காரணம் ரஜினி தான் என ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது ரஜினி தனுஷையும், அவரது குடும்பத்தாரையும் சில சமயங்களில் இரண்டாம் தரத்தில் வைத்துத் தான் நடத்தினாராம். இதன் காரணமாக தனுஷிற்கும் ரஜினிக்கும் பெரியளவில் மனஸ்தாபம் கூட ஏற்பட்டுள்ளது. 


எனவே தான் ரஜினியை விட மிகப்பிரமாண்டமான வீட்டை கட்டி அதில் தன் தாய் தந்தையுடன் குடியேற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டுள்ளார் தனுஷ். இதன் காரணமாகவே ரஜினியின் வீட்டிற்கு அருகிலேயே மிகப்பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி குடியேறியுள்ளார் தனுஷ் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement