• Jul 25 2025

இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை...ராம் சரண் படத்திற்காக ஷங்கரின் மாஸ்டர் பிளான்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். மேலும் இவர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 


அதுமட்டுமல்லாமல் இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. 


 மேலும் இவர் திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.


2.0 படத்தை ரிலீஸ் செய்த கையோடு இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைதது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இடையில் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்க தொடங்கிவிட்டார், இன்னொரு பக்கம் பாலிவும் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணையும் படத்தையும் அறிவித்தார்.


தற்போது இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்கும் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ஷங்கர் தனது ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்ட ஒரு விஷயத்தை வைப்பார். 


அப்படி இந்த புதிய படத்தில் ரூ. 15 கோடி செலவில் ஒரு பாடலை எடுக்க இருக்கிறாராம். இது இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்யாத ஒரு முயற்சி என்கின்றனர்.

Advertisement

Advertisement