• Jul 26 2025

நடிகை ரோஜா மகனா இது...இப்படி வளந்துட்டாரே..வைரலாகும் போட்டோ!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90 களில்  இளசுகளின் மனதை கொள்ளையடித்த நடிகர்களில் ஒருவர் தான்  நடிகை ரோஜா.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை  ரோஜா.


இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு மல்லிகா என்ற ஒரு மகள் மற்றும் கிருஷ்ண கௌசிக் என்ற ஒரு மகன் உள்ளனர்.

அத்தோடு  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார்.


இவ்வாறுஇருக்கையில்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனின் புகைப்படங்களை ரோஜா பகிர்ந்துள்ளார். மகனுக்கு உணவூட்டும் புகைப்படங்களாக இவை அமைந்துள்ளன. "எனது நாளின் மகிழ்ச்சியான தருணம் என்பது உன்னுடன் விளையாடுவது" என ரோஜா பதிவிட்டுள்ளார்.அத்தோடு  16 வயதாகும் ரோஜாவின் மகன் கிருஷ்ண கௌசிக் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement