• Jul 25 2025

அடக்க ஒடுக்கமா இருந்த ஆர்யா மனைவியா இது- பிகினி உடையில் இப்படி கவர்ச்சி காட்டுகின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

 பாலிவுட் நடிகர் சுமீத் செய்கலின் மகளான சாயிஷா டோலிவுட்டில் 2015ல் வெளியான அகில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஷிவாய் எனும் இந்தி படத்தில் நடித்த சாயிஷாவை இயக்குநர் ஏ.எல். விஜய் ஜெயம் ரவியின் வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார்.இப்படத்தில்  யம்மா.. அழகம்மா பாடலில் கவர்ச்சி நடனம் போட்டு தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடித்தார்.

 சாயிஷா அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பாவாடை தாவணி, சேலை என கிராமத்து பெண்ணாகவே மாறினார். விஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடித்த சாயிஷா அடுத்ததாக ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடிக்க இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.


கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொன்டார் சாயிஷா. கடந்த 2021ம் ஆண்டு பெண் குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், அந்த குழந்தைக்கு அரியானா என பெயர் வைத்துள்ளனர். குழந்தையை பார்த்துக் கொண்டு வரும் நடிகை சாயிஷா சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடாமல் குழந்தையுடனும் கணவர் ஆர்யாவுடனும் இருக்கும் போட்டோக்களையே போட்டு வந்தார்.


இந்நிலையில், தற்போது திடீரென நீச்சல் குளத்தில் குளித்து விட்டு பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு கமெண்ட்டாக ஸ்ப்லாஷ்.. ஸ்ப்லாஷ்.. வாட்டர் பேபி என கேப்ஷன் கொடுத்து உஷாராக கமெண்ட் பக்கத்தையும் ஆஃப் செய்து வைத்திருக்கிறார். மீண்டும் சாயிஷாவை கவர்ச்சியாக பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து மீண்டும் நடிக்க வாங்க என அழைத்து வருகின்றனர்.


ஏகப்பட்ட நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் நிலையில், சாயிஷா மீண்டும் நடிக்க வரப் போகிறாரா? அதற்காகத்தான் இந்த கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement