• Sep 14 2025

'பாக்கியலட்சுமி' சீரியல் இனி இப்படித்தான் இருக்கும்... மன்னிப்புக்கேட்டு கோபி வெளியிட்ட திடீர் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பாக்கியலட்சுமி' சீரியலுக்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உண்டு. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர். 


அந்தவகையில் இந்த சீரியலை ரசிகர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி தான். இதற்கு முன்னர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் கொடுத்தது 'பாக்கியலட்சுமி' சீரியலில் இவர் நடித்து வருகின்ற கோபி கதாபாத்திரம் தான்.

நடிப்பைத் தாண்டி சமூக வலைதங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்ற கோபி அதில் அவ்வப்போது புக்கியப்படங்கள், மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.


அந்தவகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "எப்பிடிப் பார்த்தாலும் கோபி வில்லன் தான், இல்லையா? சீரியலில் இனி வேற யாருமே இல்லை, வரப்போற சீன்ஸ் எல்லாம் கொஞ்சம் நெருடலாக, வருத்தமாக இல்லேன்னால் கோபம் வாற மாதிரி இருக்கும், தயவு செய்து மன்னிச்சிடுங்க, என்ன பண்ணுறது ராமாயணத்தில் ராவணன் இல்லை என்றால் கதை நடக்குமா..?" எனக் கேட்டுள்ளார்.

மேலும் "இந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே என் பாக்கியலட்சுமி தான், 'பாக்கியலட்சுமி சீரியலில் நான் ஒரு குட்டிக் கதாபாத்திரம் பண்ணுறேன், நடிகனுக்கு முக்கியமே நடிப்புத்தான், எது கொடுத்தாலும் பண்ணனும்" எனவும் அதில் கூறியுள்ளார்.

எனவே இவர் கூறியதை வைத்துப் பார்க்கும் போது இந்த சீரியலில் இனி கோபியினுடைய வில்லத்தனம் தான் அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement