• Jul 25 2025

பேத்தி வயசு இருக்கிற பெண்ணை இப்படியா சொல்லுவீங்க... வைரமுத்துவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மார்க்குகள் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.அவருக்கு ஏராளமான பிரபலங்களும் வாழ்த்து கூறி இருந்தனர்.


அந்தவகையில் கவிஞர் வைரமுத்து நந்தினிக்கு ஒரு தங்க பேனாவை பரிசாக தருவதாக அறிவித்து இருக்கிறார். அதாவது "அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 


இந்நிலையில் பிளஸ் 2 மாணவியை பாராட்டிய வைரமுத்துவை தற்போது நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர் அந்தப் பதிவில் மாணவி நந்தினியை தங்கை என குறிப்பிட்டு இருந்தது தான். 


அதாவது உங்கள் பேத்தி வயது இருக்கும் அந்தப் பெண்ணை நீங்கள் இப்படி தங்கை என சொல்லலாமா, பேத்தி என பதிவிட்டு இருந்தால் சரியாக இருந்திருக்கும் என கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது அவர் தங்க பேனாவை நேரில் வந்து தருகிறேன் என சொன்னதற்கு, தயவு செய்து கொரியரில் அனுப்பி விடுங்கள் எனவும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement