• Jul 24 2025

இத்தனை நாளாக குயின்ஷி எலிமினேஷனில் இருந்து தப்பியது இப்படித்தானா..? தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஏற்கெனவே 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6ஆவது சீசனானது தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்நிகழ்ச்சியிலிருந்து வாரா வாரம் ஒருவர் வெளியேறிய வண்ணம் தான் இருக்கின்றார். 


அந்தவகையில் இந்த வாரம் குயின்ஷி எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அதாவது ஏனைய போட்டியாளர்களை விட இந்த வாரம் அவருக்கு தான் மிக குறைந்த வாக்குகள் கிடைத்து இருக்கிறது. குயின்ஷி தான் வெளியேறுவார் என்பது பலரும் எதிரார்த்திருந்த ஒன்று தான். 


இருப்பினும் இவர் எப்படி 50 நாட்கள் வரை பிக்பாஸில் தாக்குப்பிடித்தார் என்பது பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்திருக்கிறது. அந்தவகையில் அவர் பிக்பாஸ் வரும் முன்பே தனக்காக பணியாற்ற ஒரு பெரிய டீமை வைத்துவிட்டு தான் வந்திருக்கிறாராம். அதற்காக அவர் அதிகம் செலவும் செய்திருக்கிறார் எனவும் கூறப்படுகின்றது.


அதாவது சில வாரங்களுக்கு முன்பு அவர் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட போது 'எனக்காக work பண்றவங்களுக்கு நன்றி' என ஷோவிலேயே இருந்தவாறு அவர்களுக்கு நன்றி கூறி இருந்தார். அதுமட்டுமல்லாது பின்னர் மணிகண்டன் உடன் பேசும்போது தனக்கு டீம் இருக்கிறது, அவர்கள் உனக்காகவும் வேலை செய்துகொண்டிருப்பார்கள் எனவும் கூறி இருக்கிறார்.


மேலும் குயின்ஷி மட்டுமின்றி பல போட்டியாளர்கள் இப்படி செய்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த வரிசையில் குயின்ஷியும் உள்ளடங்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கின்றது.

Advertisement

Advertisement