• Jul 23 2025

இது என்னுடைய கனவு ஆனால் உண்மையாக நடந்திருக்கு- லியோ படம் குறித்து ஜனனி போட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 900 ஸ்க்ரீன்களில் படம் ரிலீஸாகியிருப்பதாக கூறப்படுகிறது. லியோ ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர்.

இப்படத்தில் விஜய்யுடன், த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.சிறப்பு காட்சியாக 7 மணிக்கு எப்படியாவது படத்தை திரையிட பட தயாரிப்பு தரப்பு எவ்வளவோ முயற்சித்தது. 


ஆனால் தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைக்காததால் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. 9 மணிக்குதான் காட்சி என்றால் அதற்கு முன்னதாகவே தியேட்டர் வாசலில் ரசிகர்கள் குழும ஆரம்பித்தனர். பட்டாசு வெடித்து ரகளையாக கொண்டாடிவிட்டு தியேட்டருக்குள் சென்றனர் ரசிகர்கள்.


மேலும் லியோ திரைப்படத்தை த்ரிஷா,லோகேஷ் கனகராஜ்,அனிரூத், மன்சூர் அலிகான், கீர்த்தி சுரேஷ் எனப் பல பிரபலங்கள் சென்று நேரடியாகப் பார்த்திருந்தனர்.இந்த நிலையில் லியோ படத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலமான ஜனனி லியோ ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தைப் பதிவிடடுள்ளார். அந்்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement