• Jul 25 2025

என்னை அசிங்கப்படுத்திறவங்களுக்கு நான் கொடுக்கும் பதிலடி இது தான்- ஷிவாங்கியின் அட்டகாசமான பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி.இவர் இதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் மக்களின் பேராதரவையும் பெற்றார்.

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்திருக்கிறது.சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா என்ற படத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.


அதே போல சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் ஷிவாங்கி நடித்து இருந்தார். என்னதான் ஷிவாங்கிக்கு பல லட்சம் பாலோவர்கள் என்னதான் அவரை விமர்சிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றத்தில் இருந்தே இவருக்கு ரசிகர்களுடன் சில ஹேட்டர்ஸ்களும் உருவாகினர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.


மேலும், இவரை Cringe என்று பல பலர் விமர்சித்து வருவதும் உண்டு. ஆனால், அதைப்பற்றி எல்லாம் ஷிவாங்கி பெரிதாக கவலைப்படுவது இல்லை. இப்படி ஒரு நிலையில் கவலைப்படுவது தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்களை Cringe,Over actingனு சொல்றவங்களுக்கு உங்களின் Reaction என்ன ?’ என்று கேள்வி கேட்க, சிரிக்கும் எமோஜியை போட்டு ‘இது தான் என் Reaction ‘என்று பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement