• Jul 24 2025

"விஜயகாந்த்தின் உடல்நலத்திற்கு இதல்ல பிரச்சினை, வேறு ஏதோ நடந்து விட்டது"... நடிகர் சந்திரசேகர் ஓப்பன் டாக்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா, அரசியல் இரண்டிலுமே தீவிர கவனம் செலுத்தி வந்த ஒருவர் தான் நடிகர் விஜயகாந்த். இவரது கம்பீரமான நடைக்கும் கச்சித்தமான தொனிக்கும் மயங்காத ரசிகர்களே இல்லை எனலாம். ஆனால் சமீபகாலமாக விஜயகாந்த் உடல்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டு கடுமையாக மெலிந்துள்ளார். கம்பீரமாக இருந்த அவரின் தோற்றமானது தற்போது பார்ப்பவர்கள் கண்ணையும் கண் கலங்க வைக்கின்றது.


இந்நிலையில் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான வாகை சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்த் குறித்து வெளிப்படையாக பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "சிவாஜி, எம்ஜிஆர் போல் விஜயகாந்த்துக்கும் காலத்துக்கும் வயது ஆகாது என்றே நான்  நினைத்தேன். 


ஏனென்றால் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஒருவர் அல்ல. மிகவும் கடுமையாக உழைத்த உடம்பு அது. எனவே அப்படியேதான் இருப்பார் என நம்பினேன். பின்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு நேரில் சென்று நான் சந்திக்கவில்லை. தற்போது நான் அவரை பார்த்து சுமார் 10 வருடங்கள் ஆகின்றன" என்றார்.


மேலும் "அவரது உடல்நிலை கெட்டுப்போனதற்கு காரணம் கெட்டப்பழக்கம்தான் என்கிறார்கள். ஆனால் அவரைவிட கெட்டப்பழக்கம் அதிகம் உள்ள நடிகர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார். விஜயகாந்த்துக்கு வேறு என்னமோ நடந்துவிட்டது" என்று ஓப்பனாக கூறியுள்ளார் நடிகர் சந்திரசேகர்.


Advertisement

Advertisement