• Jul 25 2025

இது எங்களுடைய ரொம்ப நாள் கனவு -பிக்பாஸ் தாமரையின் புதிய வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 5-ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தாமரை. சாமானிய மக்களில் ஒருவராக கிராமத்தில் இருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்ற போட்டியாளர் தான் தாமரை செல்வி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, சிறு வயதில் முதல் அடிப்படை தேவைகளுக்கும் அலைந்து திரிந்து படாத கஷ்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக தெருக்கூத்து நாடகத்தில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வந்தார்.


 பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி துளியும் தெரியாமல் அனைவரையும் விட சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இப்படிப்பட்ட குடும்ப சூழலில் வளர்ந்த தாமரையின் அம்மா மற்றும் சகோதர, சகோதரிகளின் குடும்பம் இன்னும் ஏழ்மை நிலையிலேயே உள்ளது. தாமரையின் அம்மா ஒரு சிறு குடிசை வீட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 


மழைக்காலங்களில் பூச்சிகள் வரும் என்பதால் அருகில் உள்ள பள்ளிகள் அல்லது கோவில்களில் சென்று உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் தாமரையின் தாயார். ஒரு பேட்டியின் போது நாடகத்தில் கிடைக்கும் பணத்தை 200 அல்லது 300 ரூபாய் தான் கிடைக்கும் அதை அப்படியே கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிடுவார், இன்று வரை அவர்தான் எங்களைப் பார்த்து கொள்கிறார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.


இதை அறிந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தாமரை அம்மாவிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்களை திரட்டி அவர்களிடம் பணத்தை திரட்டி தாமரையின் அம்மாவிற்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.


 இதற்காக வீட்டை வடிவமைத்து அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். உண்மையிலேயே தாமரைக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீட்டை சுற்றி காண்பித்து தாமரை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 


Advertisement

Advertisement