• Jul 25 2025

இது எங்களோட தலப்பொங்கல்-வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தம்பதியினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகர் தான் ஆதி.இவர் தமிழில்  மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

அதே போல ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த 'டார்லிங்' மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார் நடிகை நிக்கி கல்ராணி. இதனைத் தொடர்ந்து, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2, உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் 2022-ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது. இந்நிலையில் இந்த முறை தலைப்பொங்கல் கொண்டாடும் இந்த கோலிவுட் க்யூட் தம்பதியின் ஃபோட்டோ வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக இவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ பதிவில், “வணக்கம்! இது எங்களோட தலப்பொங்கல்.. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் எங்கள் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகக்ள்” என்று குறிப்பிடுள்ளனர் .



Advertisement

Advertisement