• Jul 25 2025

என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கேட்ட பெண்.. சல்மான் கானின் புதிய பதில் இதுதான்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் நடிப்பில் கடைசியாக கிசி கி பாய், கிசி கா ஜான் திரைப்படம் வெளிவந்தது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தேடி தரவில்லை. சல்மான் கானுக்கு 57 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

நடிகைகளுடன் இவர் காதல் உறவில் இருந்துள்ளார். ஆனால், அந்த காதல் அனைத்துமே தோல்வியில் தான் முடிந்தது.எனினும்  அதற்க்கு காரணமும் நான் தான் என கூறி சமீபத்தியே பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் பேசியிருந்தார்.

இவ்வாறுஇருக்கையில், அண்மையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அங்கு பெண்ரிப்போர்ட்டர் ஒருவர் 'என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் சல்மான்' என கூறினார்.

எனினும் இதற்க்கு 'என் திருமண வயது காலம் முடிஞ்சுருச்சு.. 20 வருஷம் முன்னாடி நீங்க இத கேட்ருக்கனும்' என சல்மான் கான் பதில் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement