• Jul 25 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விலகிய உண்மை இது தான்...காவியா அறிவுமணி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடும் தொடர்கள் பல உண்டு. அதில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தமிழிலேயே உருவாக்கப்பட்ட இந்த தொடரை பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு முடித்தும் விட்டார்கள்.

ஆனால் தமிழில் நல்ல டிஆர்பியுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.எனினும் தற்போது கதையில் இத்தனை வருடங்கள் ஒன்றாக இருந்து கூட்டு குடும்பம் என்றால் இதுதான் என கூறி வந்த அண்ணன்-தம்பிகள் பிரிந்துவிட்டார்கள், மீண்டும் அவர்கள் எப்போது ஒன்று கூடுவார்கள் என்பது தெரியவில்லை.

மேலும்  இந்த தொடரில் சித்ரா இறப்பிற்கு முல்லை வேடத்தில் யார் நடிப்பார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் காவ்யா அறிவுமணி நடிக்க வந்தார், ஆனால் இப்போது அவரும் வெளியேறி அவருக்கு பதிலாக வேறொரு நாயகி நடித்து வருகிறார்.

அண்மையில் ஓரு பேட்டியில் காவ்யா அறிவுமணி, நான் தொடரில் இருந்து வெளியேறியது குறித்து நிறைய வதந்திகள் வருகின்றன. ஆனால் எனக்கு நல்ல பட வாய்ப்புகள் அந்த நேரத்தில் வந்தன, எனக்கு வெள்ளித்திரையும் கனவு தான், அதை பயன்படுத்திக் கொண்டேன்.

அத்தோடு பார்ப்பவர்கள் எல்லோரும் நல்ல ரீச் கொடுத்ததில் இருந்து ஏன் வெளியேறினீர்கள் என்று அந்த விஷயத்தை மட்டும் கேட்கிறார்கள். அத்தோடு  வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் நடிக்க தான் போகிறோம், எல்லாமே பெஸ்ட் தான் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement