• Jul 25 2025

தமிழ்நாட்டில் நம்பர் ஒன் சீரியலாக உயர்ந்த 'எதிர்நீச்சல்'... எல்லாத்துக்கும் காரணம் இந்த ஒரு விஷயம் தானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலிற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. இதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றன. 


அந்தவகையில் இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆதிரை காதலித்த அருணை விடுத்து கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்த இயக்குநரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக எதிர்நீச்சல் உள்ளது.


இந்நிலையில் தற்போது ஆதிரையின் திருமண டிராக் ஒளிபரப்பான வாரம் அதாவது கடந்து வாரத்திற்கான ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் 11.16 TRP ரேட்டிங் பெற்று 9.30 மணி ஸ்லாட்டில் தமிழ்நாட்டில் அதிக ரேட்டிங் பெற்ற முதல் சீரியல் என்ற சாதனையை பெற்றுள்ளது.


அந்தவகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங்கில் நம்பர் 1 சீரியலாக எதிர்நீச்சல் வந்துள்ளமையினால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement