• Jul 25 2025

பாண்டியன் சீரியலில் மீண்டும் நடிக்க வந்ததற்கு இது மட்டும் தான் காரணம்- ஓபனாகவே சொன்ன விஜே தீபிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் மாறி வருவதோடு ஜீவா தனது குடும்பத்திற்கு எதிராக மாறிவிட்டார்.இதனால் எப்போது தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து மாமியார் வீட்டுக்கு போகப் போகிறாரோ என்று தெரியாமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படியான நிலையில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த சாய் காயத்திரி இந்த சீரியல் தற்பொழுது வித்தியாசமாக நகர்ந்து செல்வதால் எனது எதிர்காலத்தை எண்ணி இந்த சீரியலில் இருநத விலகுகின்றேன் என அண்மையில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்பொழுது இந்த சீரியலில் இருந்தும் விலகி விட்டார்.


இந்த நிலையில் மீண்டும் ஐஸ்வர்யாவாக விஜே தீபிகா இணைந்துள்ளார். சாய் காயத்திரிக்கு முதலில் நடித்து வந்த இவர் மீண்டும் சீரியலில் நடிக்க வந்தது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் விஜே தீபிகா இந்த சீரியலில் மீண்டும் இணைந்துள்ளதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.


அதாவது அதிஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும் ஆனால் முயற்ச்சி ஆயிரம் கதவுகளைத் திறக்கும் . பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியபோது ரொம்பவே கவலைப் பட்டேன். இப்போ திரும்பவும் அதே வாய்ப்புக் கிடைத்திருக்கு. அதை எப்படி யூஸ் பண்ணிக்கணும் என்று தெரியும்.எனக்கு சர்ப்போட் பண்ணின அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார். அத்தோடு தான் இந்த சீரியலில் மீண்டும் நடிக்க வந்ததற்கு காரணமே என்னுடைய திறமையை வெளிக் காட்டணும் என்று தான் யாரையும் பழி வாங்கும் எண்ணம் எனக்கில்லை. இந்தப் பயணத்தை மீண்டும் தொடருவதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement