• Jul 25 2025

அஜித் என்கிட்ட சொன்னது இது மட்டும்தான்... AK62 பற்றி ஓப்பனாகப் பேசிய விக்னேஷ் சிவன்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் 'துணிவு' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படமானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாக இருக்கின்றது. 


மேலும் கடைசியாக வெளியான 'வலிமை' திரைப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாத நிலையில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார் அஜித். அதுமட்டுமல்லாது இதுவரை இப்படத்திலிருந்து ஜிப்ரான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே தினத்தில் வெளியாக இருக்கின்றன. அந்தவகையில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றது. 

துணிவு படத்தையடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'AK62' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் உடைய படப்பிடிப்பானது ஜனவரி இறுதியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு அஜித் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பைக்கில் சுற்றுலா செல்ல இருப்பதாகக் கூறப்படுகின்றது. 


அதுமட்டுமல்லாது உலகம் முழுக்க பைக்கில் சுற்றுலா செல்லும் அஜித் நடிப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் பிரேக் எடுக்கவுள்ளார். எனவே AK62 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அஜித்தின் படங்கள் வெளியாகாது என பேசப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக நம்ம தல ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது


அத்தோடு அஜித் சமீபகாலமாக சீரியஸான படங்களில் நடித்து வரும் நிலையில் 'AK62' திரைப்படம் ஒரு பீல் குட் படமாக உருவாகும் என்ற தகவல் வெளி வந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை பற்றி சமீபத்தில் விக்னேஷ் சிவன் பேசுகையில் "அஜித் என்னிடம் நீங்கள் உங்கள் ஸ்டைலில் படம் பண்ணுங்க என கூறினார். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது" என்றார். எனவே இதனைத் தொடர்ந்து AK62 திரைப்படத்தில் நாம் வித்யாசமான அஜித்தை பார்க்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement