• Jul 24 2025

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு கோபி விலகுவதாக அறவித்தமைக்கு இது தான் காரணம்- பொன்னி சீரியல் கதாநாயகன் கொடுத்த தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பொன்னி. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் சபரி.இவர் இதற்கு முதல் வேலைக்காரன் ,பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்திருக்கின்றார்.


இருப்பினும் பொன்னி சீரியல் மூலம் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது பொதுவாக எந்த துறைக்கு போனாலும் நிறைய அவமானங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால் மீடியாவைப் பொறுத்த வரையில் நிறைய அவமானப்படுத்துவாங்க.


அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நம்முடைய வேலையை சரியாக செய்து கொணடிருந்தால் மாத்திரமே நிலைத்து நிறற்க முடியும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவரிடம் பொதுவாக சீரியல்களில் லீட் ரோலில் நடித்து வருபவர்கள் சீரியல்களில் இருந்து விலகிறது என்பது அதிகமாக இருக்கு அண்மையில் பாக்கியலட்சுமி சீரியல் கோபி கூட அறிவித்திருந்தாரு. அதை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய அவர் அது அவங்களோட சுய விருப்பம் அவங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் நிறைய பிரச்சினை இருக்கும் எல்லா வேலைகளைப் போல தான் நடிப்பு என்பதும் ஒரு வேலை அவங்களுக்கு என்ன தோணுதோ அதை தான் பண்ண முடியும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement