• Jul 23 2025

மகனுக்கு 'மீர்' என்று பெயர் வைக்க இதுதான் காரணம்... அடடே அசத்திட்டீங்க அட்லீ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தடம் பதித்த இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. இவரது தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அவர் தான் விரும்பிய சின்னத்திரை நடிகையான பிரியாவைத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார்.


அந்தவகையில் சமீபத்தில் கூட இந்த ஜோடி தங்களது திருமண நாள் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதனையடுத்து அட்லீ தான் தந்தையான தகவலை பகிர்ந்திருந்தார். மேலும் அட்லீ – பிரியாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது.


இந்நிலையில் தனது மகனுக்கு அட்லீ வைத்துள்ள பெயர் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. அதாவது அட்லீ தன் மகனுக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பெயரினுடைய அர்த்தம் என்ன என ரசிகர்கள் பலரும் கேட்டிருந்தனர். அந்தவகையில் ஷாருக்கான் தந்தையின் பெயர் மீர். இதனால் தான் தனது மகனுக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளதாக அட்லீ கூறியுள்ளார்.


Advertisement

Advertisement