• Jul 26 2025

பாக்கியலட்சுமி சீரியலில் ரஞ்சித் என்ட்ரி கொடுத்ததுக்கு இது தான் காரணம்- முக்கிய பிரபலம் கூறிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கணவன் கோபி கைவிட்டதற்குப் பிறகும் பாக்கியா வாழ்க்கையில் போராடி ஜெயித்து வருகின்றார்.கோபி வியந்து பார்க்கும் அளவுக்கு அவருடைய முன்னேற்றம் இருக்கின்றது. ராதிகா தனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாததால் கிண்டல் பண்ணியதை நினைத்து பாக்கியா ஆங்கிலம் கற்று வருகின்றார்.

இப்படி ஆங்கிலம் கற்கும் இடத்தில் தான் பாக்கியா பழனி என்பவருடன் நட்பாகின்றார். இப்பழனி என்னும் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரஞ்சித் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ரஞ்சித் இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்ததைக் குறித்து இந்த சீரியலில் ராமமூர்த்தியாக நடித்து வருபவர் இன்டர்வியூ கொடுத்துள்ளார்.


அதில் அவர் கூறியதாவது இந்த சீரியலின் ஒரிஜினல் சீரியலிலே அப்படி ஒரு கதாப்பாத்திரம் இருக்கு. பாக்கியா ரொம்ப குடும்பப் பொறுப்பான நல்ல பொண்ணு அவளுக்கு ஒரு நல்ல நண்பராகவே இந்த பழனி என்னும் கதாப்பாத்திரம் இருக்கும். அதை கரெக்டான டைம்ல இயக்குநர் கொடுத்திருக்கிறாங்க ரஞ்சித்தும் சூப்பராக பண்ணிட்டு வாராங்க. இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கும் இதனையே எடுத்துக் காட்டுகின்றது என்று கூறினார்.


மேலும் கோபி இரண்டாவதாக ராதிகாவைத் திருமணம் செய்தது குறித்து  கேட்ட போது இது சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் நடக்குது. இது அவங்களோட விருப்பம். நாங்க இதை எப்பவும் விமர்சிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement