• Jul 24 2025

எனது உடல் எடை அதிகரிக்க காரணம் இது தான் .. முதல் முறையாக மனம் திறந்த ரவீந்தர்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களது திருமணம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஃபேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தரை பணத்திற்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்ததாக கமெண்ட்ஸ் எழுந்தன.

இதனால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டிங்கில் இந்த ஜோடி இருந்து வந்தது. இவர்கள் எது செய்தாலும் அது ட்ரெண்டானது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்கள் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அதிகமான கோயில் பயணங்களில் இவர்களை காண முடிந்தது. இதேபோல மகாலட்சுமியும் அதிகமான விளம்பரங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஃபேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தர், தான் குண்டானதற்கான காரணத்தை முதல்முறையாக கூறியிருக்கிறார்.

ரவீந்தர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், தன்னுடைய உடல் எடை என்பது சாதாரணமானதுதான் என்றும் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதே இந்த விஷயத்தில் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கையில் அலர்ஜி போல ஏதோ வந்தாகவும் அதற்கு சிகிச்சை எடுக்கப் போய், அந்த மாத்திரைகளின் பாதிப்பால்தான் தன்னுடைய உடல் எடையும் அதிகரித்தது என்றும் கூறியுள்ளார் ரவீந்தர்.

இது பரம்பரை வியாதி இல்லை என்றும், தன்னுடைய 200 கிலோ எடையை தான்தான் தூக்கி சுமந்து வருவதாகவும் அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்றும் ரவீந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு நிகழ்விற்கு சென்றால் அனைவரும் நாற்காலியில் அமர்ந்தாலும் தன்னால் அமர முடியாது என்றும் ரவீந்தர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் ரவீந்தர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement