• Jul 24 2025

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பாலா வராமல் இருப்பதற்கு காரணம் இது தானாம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம். இதுவரை 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில். கடந்த வாரம் 4-வது சீஸனும் பிரமாண்டமாக தொடங்கியது. நிகழ்ச்சியில் புதியதாக குக்குகளும், சில புதிய கோமாளிகளும் வந்துள்ளனர் .

கடந்த சீசனில் ஒரு சில நாட்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த புகழ் இந்த 4-வது சீசன் முழுவதுமாக வந்துள்ளார். இதனால குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்கள் பலரும் விரும்பி பார்க்கிறார்கள். 

மேலும் நிகழ்ச்சியில் மற்றொரு சோகமான விஷயம் என்னவென்றால் இந்த சீசன் பாலா கலந்துகொள்ளவில்லை .

குக் வித் கோமாலியில் அவர் அடிக்கும் கவுண்டர்களை ரசிகர்கள் பலரும் தற்போது மிஸ்  செய்கிறார்கள் என்றே  கூறலாம் . எனவே பாலா ஏதற்காக கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்தவகையில் பாலா தற்பொழுது ரஜினியின் ஜெயிலர் மற்றும் ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளாராம். எனவே கால்ஷீட் காரணமாக தான்  அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிகிறது.எனவே காத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement