• Jul 24 2025

'தோழா' படத்தை நிராகரிக்க இருந்த கார்த்தி... பின்னர் ஓகே சொன்னதற்கு காரணம் இதுதானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. 'பருத்தி வீரன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த இவர் நடிப்பில் தற்போது வரை ஏராளமான படங்கள் உருவாகி இருக்கின்றன.


இவர் நடிப்பில் எத்தனை படங்கள் வெளியானாலும் அத்தனை படங்களும் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்து சாதனை படைத்திருந்தது.

அப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் முக்கிய திரைப்படங்களான 'பொன்னியின் செல்வன், சர்தார்' உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கின்றன.


இந்நிலையில் கார்த்தியின் நடிப்பில் உருவான படங்களில் பலராலும் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது 'தோழா'. இப்படத்தினை தெலுங்கில் பிரபலமான இயக்குநராக திகழ்ந்து வருகின்ற வம்சி இயக்கியிருந்தார். இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. 


சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இப்படம் குறித்த தகவல் ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார் நடிகர் கார்த்தி.

அதாவது அப்படத்தின் கதையை கேட்கும் முன்பு அந்த கதையை நிராகரித்து விட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தாராம் கார்த்தி. ஆனால் கதையை கேட்டதும் கதை தனக்கு ரொம்ப பிடித்துவிட்டதால் அப்படத்தில் நடித்தாக கூறியிருக்கின்றார். 

Advertisement

Advertisement